உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத புதுச்சேரி - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

0 936
உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பின்னரும் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை எனப் பிரதமர் நரேந்திர மோடி குறைகூறியுள்ளார்.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பின்னரும் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை எனப் பிரதமர் நரேந்திர மோடி குறைகூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மோடி, காந்தியின் கிராம சுயராஜ்யக் கனவு காஷ்மீரில் நனவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

புதுச்சேரியில் ஊராட்சி, நகராட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பின்னரும் தேர்தல் நடத்தப்படவில்லை எனத் தெரிவித்தார்.

மக்களாட்சியைப் பற்றித் தனக்குப் பாடங்கற்பிக்கும் ஒருவரே புதுச்சேரியை ஆண்டுகொண்டிருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமியைப் பெயர் குறிப்பிடாமல் பிரதமர் குறைகூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments