சாலையோரம் நின்ற ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி கூலி தொழிலாளர்கள் 7 பேர் பலி

0 925
தெலங்கானா மாநிலம் விகாரபாத்தில் ஆட்டோ மீது லாரி மோதி கவிழ்ந்த விபத்தில் கூலி தொழிலாளர்கள் 7 பேர் பலியாகினர்.

தெலங்கானா மாநிலம் விகாரபாத்தில் ஆட்டோ மீது லாரி மோதி கவிழ்ந்த விபத்தில் கூலி தொழிலாளர்கள் 7 பேர் பலியாகினர்.

செட்டிபள்ளி தாண்டா கிராமத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோவில் 5 கூலி தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர்.

அப்போது முமின்பேட்டையில் இருந்து வந்த லாரி, முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது  ஆட்டோ மீது மோதி கவிழ்ந்தது.   

இதில், லாரியின் அடியில் சிக்கி ஆட்டோ நொறுங்கியது. விபத்தில் ஆட்டோவில் இருந்த  5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments