ரஷ்யாவின் துடர்கோப்கா நதியின் அனைத்து பகுதிகளும், கரையோர பகுதிகளும் நுரை நிரம்பி காட்சி

0 571
ரஷ்யாவின் துடர்கோப்கா நதியின் அனைத்து பகுதிகளும், கரையோர பகுதிகளும் நுரை நிரம்பி காட்சி

ரஷ்யாவில் ஓடும் நதி ஒன்று, நுரைகளால் நிரம்பி காட்சியளிக்கிறது. செயின்ட்பீட்டர்ஸ்பர்க் நகரில் ஓடும் துடர்கோப்கா நதியின் (Dudergofka river) அனைத்து பகுதிகளும், கரையோர பகுதிகளும் நுரை நிரம்பி காட்சியளிக்கிறது.

ஆற்றில் நிரம்பியிருக்கும் நுரை காற்று காரணமாக அருகிலுள்ள தெருக்களிலும் பறந்தும் வருகின்றன.

நதியில் கலக்கும் ரசாயன கழிவால் நுரை ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படும் நிலையில், சட்டவிரோதமாக யார் ரசாயனத்தை கலக்க செய்தனர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில், சலவைக்கு பயன்படுத்தபடும் மருந்தில் கலக்கப்படும் எண்ணெய் பொருளே நுரை ஏற்படுவதற்கு காரணமென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments