2028ஆம் ஆண்டில் அமெரிக்காவை முந்திச் சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டதாக உருவெடுக்கும் - ஆய்வறிக்கையில் தகவல்

2028ஆம் ஆண்டில் அமெரிக்காவை முந்திச் சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டதாக உருவெடுக்கும் என ஓர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2028ஆம் ஆண்டில் அமெரிக்காவை முந்திச் சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டதாக உருவெடுக்கும் என ஓர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் சீனாவும் உள்ளன. இந்நிலையில் கொரோனா சூழலுக்குப் பின் உலக நாடுகளின் பொருளாதார மீட்சியை அடிப்படையாகக் கொண்டு, பொருளியல் மற்றும் வணிக ஆராய்ச்சிக்கான மையம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில் 2028ஆம் ஆண்டில் அமெரிக்காவை முந்திச் சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இரண்டாயிரத்து முப்பதுகளின் தொடக்கத்தில் இந்தியா மூன்றாமிடத்தைப் பிடிக்கும் வரை ஜப்பான் தொடர்ந்து மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
Comments