மத்தியப் பிரதேச பாந்தவ்கர் தேசியப் பூங்காவில் வெப்பக்காற்று நிரம்பிய பலூனில் பறந்து சென்று காட்டுயிர்களைக் கண்டுகளிக்கும் வசதி தொடக்கம்

மத்தியப் பிரதேச பாந்தவ்கர் தேசியப் பூங்காவில் வெப்பக்காற்று நிரம்பிய பலூனில் பறந்து சென்று காட்டுயிர்களைக் கண்டுகளிக்கும் வசதி தொடக்கம்
நாட்டிலே முதன்முறையாக மத்தியப் பிரதேசத்தின் பாந்தவ்கர் தேசியப் பூங்காவில் வெப்பக் காற்று நிரம்பிய பிரமாண்ட பலூனில் பறந்து சென்று காட்டுயிர்களைக் கண்டுகளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் 716 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் பாந்தவ்கர் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்களின் இயற்கை வாழிடமாக இந்தப் பூங்கா உள்ளது.
இங்குச் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, வெப்பக்காற்று நிரம்பிய பலூனில் பறந்துசென்று பூங்காவின் இயற்கை எழிலையும் விலங்குகளையும் கண்டுகளிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
Comments