அமெரிக்க செய்தியாளர் டேனியல் பேர்ல் கொலையாளி ஒமர் சையத்துக்கு விடுதலை - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

அமெரிக்க செய்தியாளர் டேனியல் பேர்ல் கொலையாளி ஒமர் சையத்துக்கு விடுதலை - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியாளர் டேனியல் பெர்லை கடந்த 2002ம் ஆண்டில் கடத்திச் சென்று கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்த தீவிரவாதி ஓமர் சையத் உள்ளிட்ட சிலரை பாகிஸ்தான் சிந்து மாகாண உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது .
இது குறித்து பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. டேனியல் பெர்ல் கொலைகாரர்களை விடுதலை செய்யக் கூடாது என்று அமெரிக்கா பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடுத்துள்ளது.
பாகிஸ்தானில் நடப்பவைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Comments