விவசாயிகளை ஏமாற்றிய பல்ராம்சிங் வீடு ஏலம்..! வேளாண் சட்டத்தால் அதிரடி

0 59487

42 விவசாயிகளிடம், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வேளான் விளைபொருட்களை விலைக்கு வாங்கிக் கொண்டு, தலைமறைவான பல்ராம் சிங் என்ற வியாபாரியின் வீடு, புதிய வேளாண் சட்டத்தின்படி மாவட்ட நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில்  நடந்துள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் புதிய வேளான் சட்டத்தை எதிர்த்து கடந்த 30 நாட்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பாரதிய ஜனதா ஆட்சி நடக்கும் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில், விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, சந்தை நடைமுறைகளில் மாநில அரசு சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகள், தங்களை ஏமாற்றும் மோசடி வியாபாரிகளின் மீது புகார் அளித்து நிவாரணம் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் குவாலியர் மாவட்டம், பிதாவர் வட்டம்,பாஜ்னா கிராமத்தைச் சேர்ந்த பல்ராம்சிங் என்ற வியாபாரி 45 விவசாயிகளிடம் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்து விட்டு அதற்குரிய விலையைக் கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதையடுத்து பல்ராம்சிங் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 23 விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் காஸ்லேந்திர விக்ரம் சிங் உத்தரவின் பேரில் பல்ராம் சிங்கின் வீட்டை ஏலம் விட்டு அந்த பணம் விவசாயிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது, அத்தோடல்லாமல் வியாபாரி பல்ராம் சிங்கின் நிலத்தையும் கையகப்படுத்தி விவசாயிகளுக்கு மீதம் உள்ள தொகையை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை விவசாயிகளிடம் பேசிய மாவட்ட ஆட்சி தலைவர் காஸ்லேந்திர விக்ரம் சிங் தெரிவித்தார். ஒரு பக்கம் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்பது போல ஒரு தரப்பினர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க , புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உற்ற தோழனாக இருப்பதாக விவசாயிகள் நம்பும் அளவிற்கு மோசடி வியாபாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments