ஆற்றில் மூழ்கி மலையாள நடிகர் அனில் நெடுமங்காடு உயிரிழப்பு

மலையாளப் பட நடிகரான அனில் நெடுமன்காடு கேரளத்தின் மாலன்கரா அணையில் மூழ்கி உயிரிழந்தார்.
மலையாளப் பட நடிகரான அனில் நெடுமங்காடு கேரளத்தின் மாலன்கரா அணையில் மூழ்கி உயிரிழந்தார்.
அவருக்கு வயது 48. அய்யப்பனும் கோஷியும் உள்ளிட்ட படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் அனில் நெடுமன்காடு
இடுக்கி மாவட்டத்தின் தொடுபுழா பகுதியில் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார். பின்னர் தமது நண்பர்களுடன் அணையில் குளிக்கச் சென்ற அவர் ஆற்றில் மூழ்கினார்.
அங்கிருந்தவர்களால் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் உயிர் பிழைக்கவில்லை. செய்தி அறிந்து வேதனைப்பட்டதாக துல்கர் சல்மான் உள்ளிட்ட கேரள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்
Comments