அமெரிக்காவில் கார் குண்டு வெடித்து 3 பேர் படுகாயம்

அமெரிக்காவில் கார் குண்டு வெடித்ததில் 3 பேர் காயமடைந்தனர்.
டென்னிஸி மாகாணத்தில் உள்ள நாஷ்வில் என்ற இடத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை குண்டு வெடித்துச் சிதறியது.
கட்டடங்களுக்கு நடுவே நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு காரில் குண்டு இருப்பதாகவும் அடுத்த 15 நிமிடங்களில் வெடிக்கும் என முன்கூட்டியே தகவல் வந்ததாகவும் தெரிவித்துள்ள போலீசார், அதனால் குடியிருப்புவாசிகளை வெளியேற்றியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உள்ளூரைச் சேர்ந்த யாரோ இதனைச் செய்திருக்க வேண்டும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
Comments