மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு - விவசாயிகள் முடிவு என்ன ?

விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்த நிலையில், இது குறித்து முடிவெடுக்க விவசாய சங்கங்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றன.
விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்த நிலையில், இது குறித்து முடிவெடுக்க விவசாய சங்கங்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றன.
விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு நடத்திவரும் போராட்டம் 31வது நாளாக தொடர்கிறது. 5 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்தது.
இதையடுத்து விவசாயிகள், மத்திய அரசின் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பற்றி தங்களுக்குள் ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது, சில விவசாய அமைப்பினர் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடரலாம் எனக் கருத்து தெரிவித்ததை அடுத்து, விவசாயிகள் இன்று மீண்டும் கூடி ஆலோசிக்கின்றனர்.
Comments