பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

பிரேசிலில் சாலையில் நடந்து சென்ற பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.
சா பாலோ நகரில் அன்னா பவ்லா டி சில்வா என்ற 35 வயது பெண் ஒருவர் பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞன் ஒருவன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் அன்னாவை சரமாரியாகச் சுட்டதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் தோட்டாக்கள் பாய்ந்து அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த இளைஞன் தான் வைத்திருந்த சைக்கிளில் சாவகாசமாகத் தப்பிச் சென்றான்.
Comments