ஜனவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம்- அமைச்சர் நிதின் கட்காரி

0 3756
ஜனவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம்- அமைச்சர் நிதின் கட்காரி

னவரி 1- ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காணொலி மூலம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக் அட்டை பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது என்றார்.

இந்த நடைமுறையால் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் குறையும் என்ற அவர், நேரம் மற்றும் எரிபொருள் சேமிப்புக்கு உதவும் என்றார்.

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக பாஸ்டேக் அட்டை முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் இந்த திட்டத்தை 22 வங்கிகளுடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை நடைமுறைப்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments