பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பிரிட்டனில் இருந்து நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை விமானங்கள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள் பொது சுகாதாரத்துறையினர் மூலமாகவோ, அல்லது தாமாக முன்வந்து ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரிட்டனில் புதிய வீரியத்துடன் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
Comments