கேரளாவில் போதை விருந்தில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகை உள்பட 9 பேர் கைது

0 7924
கேரளாவில் போதை விருந்தில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகை உள்பட 9 பேர் கைது

கேரளாவில் நடைபெற இருந்த போதை விருந்தில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகை உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

அந்த மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் மலைப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் மது விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இரவில் தனியார் ரிசார்ட்டில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு இருந்த போதை பவுடர் உள்பட 7 வகையான போதை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். போதை விருந்திற்கு ஏற்பாடு செய்ததாக தொடுபுழாவை சேர்ந்த அஜிமல் ஜாகீர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் நடிகை பிரிஸ்டியும் ஒருவர், இவர் சில மலையாள படங்களில் நடித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments