ஐதராபாத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுப் பணிக்கு சென்ற போது விபரீதம்.. தீ வைத்து எரிக்கப்பட்ட காவல் ஆய்வாளர்

தெலங்கானாவில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்ற போது, பாதுகாப்புக்காக சென்ற காவல் ஆய்வாளர் மீது தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானாவில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்ற போது, பாதுகாப்புக்காக சென்ற காவல் ஆய்வாளர் மீது தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத் அருகே உள்ள பாலாஜி நகரில் அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றும் பணி நடைபெற்ற போது, ஜவஹர்நகர் காவல் நிலைய ஆய்வாளர் பிகஸ்பதி ராவ் மீது மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
கை மற்றும் கால்களில் 50 சதவீத தீக்காயத்துடன் பிகஸ்பதி செகந்திரபாத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். டிஜிபி மகேந்திர ரெட்டி அவரை சந்தித்து ஆறுதல் கூறினார். காவல் ஆய்வாளர் மீது தீ வைத்தது குறித்து சில நபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments