தமிழகத்தில் மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி

0 3194
தமிழகத்தில் மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி

மிழகத்தில் மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த நவம்பர் 1ம் தேதி நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றம் நடத்திய முதல் நிலைத் தேர்வில், 2400 பேர் பங்கேற்றனர்.

இந்த தேர்வு எழுத குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வழக்கறிஞர்களாக பணிபுரிந்திருக்க வேண்டும். இந்த முதல் நிலைத் தேர்வில், அரசியல் அமைப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் குறித்தான கேள்விகள் கேட்கப்படும்.

இந்த நிலையில், முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments