ரஜினிகாந்த்தை பின்னால் இருந்து இயக்குகிறதா பாஜக..? வானதி சீனிவாசன் மறுப்பு

ரஜினிகாந்த்தை பின்னால் இருந்து இயக்குகிறதா பாஜக..? வானதி சீனிவாசன் மறுப்பு
தேர்தல் களத்திற்கு வரும் நடிகர் ரஜினிகாந்த்தை பாஜக பின்னால் இருந்து இயக்குவதாக வெளியான குற்றச்சாட்டை அக்கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் நடைபெற்ற " விவசாயிகளின் நண்பர் மோடி " என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்ற வானதி சீனிவாசன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன், தேர்தல் களத்திற்கு ரஜினி வரட்டும் - பார்க்கலாம் என்றார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளதாக கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது, அவர் தெரிவித்தார்.
Comments