முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு - குற்றவாளியை கைது செய்ய மூன்று வார அவகாசம்
ரஷ்யாவில் துதர்கோப்கா ஆற்றில் ரசாயனம் கலந்து நுரை பொங்கி காற்றில் பறப்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை

ரஷ்யாவில் துதர்கோப்கா ஆற்றில் ரசாயனம் கலந்து நுரை பொங்கி காற்றில் பறப்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், ஆற்றில் இருந்து ரசாயன நுரை பொங்குவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
துதர்கோப்கா ஆற்றில் எங்கு பார்த்தாலும் வெண்பனி போன்று நுரை பரவிக் காணப்படுகிறது. காற்றில் பறக்கும் நுரை, அருகிலுள்ள சாலைகள், தெருக்களிலும் படிகிறது.
இதனை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றி உள்ளனர். சிலர் இதனை போம் பார்ட்டி என்று நகைச்சுவையாக குறிப்பிட்டாலும், இயற்கையைப் பாதிக்கும் என்பதால் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
சலவை திரவம் தயாரிக்கப் பயன்படும் எண்ணெய் பொருள் கலந்திருப்பது தெரிய வந்துள்ள நிலையில், எங்கிருந்து ரசாயனப் பொருட்கள் முறைகேடாக கலக்கப்படுகின்றன என்று ஆய்வு நடத்தப்படுகிறது.
Comments