தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 21,000 நர்சுகளுக்கு பயிற்சி, 46,000 மையங்கள் தயார் - ராதாகிருஷ்ணன்

0 8270
தமிழகம் முழுவதும் 46 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 46 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவம்பர் 25-ந் தேதியில் இருந்து கடந்த 23-ந் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து வந்த 38 ஆயிரம் பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றார். அவர்கள் அனைவரும் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாக அவர் கூறினார். இங்கிலாந்தை போல தென் ஆப்பிரிக்காவில் இருந்து வருபவர்களையும் கண்காணித்து வருகிறோம்.

தமிழகத்தில் முதல்கட்டமாக 5 லட்சம் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்காக தமிழகம் முழுவதும் 46 ஆயிரம் மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments