இலங்கை கடற்பரப்பில் நுழையும் இந்திய மீன்பிடி படகுகளை இலங்கை மீனவர்களே பிடித்து வந்து ஒப்படைக்கலாம்- இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு

0 1880
இலங்கை கடற்பரப்பில் நுழையும் இந்திய மீன்பிடி படகுகளை இலங்கை மீனவர்களே பிடித்து வந்து ஒப்படைக்கலாம்- இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு

லங்கை கடற்பரப்பில் நுழையும் இந்திய மீன்பிடி படகுகளை இலங்கை மீனவர்களே பிடித்து வந்து ஒப்படைக்குமாறு அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இலங்கை யாழ்பாணம் மாவட்டம் வடமராட்சியின் கடற்கரையோர கிராம மக்களை சந்தித்து பேசிய அவர், இலங்கை கடற்பரப்பில் நுழையும் இந்திய மீன்பிடி படகுகளை கடற்படையினரை எதிர்பார்க்காமல் இலங்கை மீனவர்களே பிடித்து வந்து ஒப்படைக்கலாம் என்றார். எந்த பிரச்சனை வந்தாலும் தாம் பார்த்துக் கொள்வதாக அவர் கூறினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில மாதங்களுக்கு முன் இந்திய மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கியது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments