புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியட்நாம் மக்களுக்கு இந்தியா உதவி... 15 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

0 2463
புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியட்நாம் மக்களுக்கு இந்தியா உதவி... 15 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

புயல் மற்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியட்நாம் மக்களுக்காக, 15 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி உள்ளது.

மத்திய வியட்நாம் பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவிடும் வகையில், இந்திய கடற்படை கப்பலான கில்டன், 15 டன் நிவாரணப் பொருட்களுடன் வியட்நாமின் ஹோசி மின் நகரை சென்றடைந்திருப்பதாக அங்குள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments