மக்கள் பணியின் போது துரை முருகன் காட்டிய ஆர்வம்!

0 23725

வேலூர் அருகே பொண்ணை ஆறு பகுதியில் வெள்ளச் சேதத்தை தி.மு.க பொதுச் செயலாளர் துரை முருகன் பார்வையிட்டார். அப்போது, துரைமுருகன் காட்டிய ஆர்வம் கட்சித் தொண்டர்களை ஆச்சரியப்பட வைத்தது.

தமிழகத்தில் புயலால் பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றின் துணை ஆறான பொண்ணை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . காட்பாடி அருகே கடந்த 17- ஆம் தேதி பாலம் ஒன்றும் சேதமடைந்தது. பாலத்தின் இருபுறமும் தடுப்பு வைத்து வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு பாலத்தை சரி செய்யும் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் இன்று பார்வையிட்டனர். கதிர் ஆனந்த் எம்.பி ஏணி வழியாக இறங்கி கீழே சென்று பணிகளை பார்வையிட்டார். அப்போது , பணிகளை பார்வையிடும் ஆர்வத்தில் பாலத்தின் முனையில் நின்று எட்டிபார்க்க துரைமுருகன் முயன்றார். ஆனால், அவரின் கண்களுக்கு பணிகள் நடைபெறும் பகுதி தென்படவில்லை.

இதையடுத்து, பாலத்தின் முனைப் பகுதிக்கு செல்ல துரை முருகன் முயன்றார். அப்போது, துரைமுருகனின் உதவியாளர்கள் அவரை தடுக்க முயன்றனர். ' அட என்னை விடுப்பா' என்றவாரே துரை முருகன் பாலத்தின் முனையில் நின்று நடைபெறும் பணிகளை தன் கண்களால் பார்த்த பின்னரே திருப்தி அடைந்தார். அப்போது, அவரின் உதவியாளர்கள் துரைமுருகனை பின்னால் இருந்து பிடித்துக் கொண்டனர். இந்த வயதிலும் மக்கள் பணியில் துரைமுருகன் காட்டிய ஈடுபாட்டை கண்டு கட்சித் தொண்டர்கள் வியந்து போனார்கள்.

பின்னர், செய்தியாளர்களிடத்தில் பேசிய துரை முருகன் , கிராம சபா கூட்டம் என்கின்ற வார்த்தையை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்கிற எந்த சட்டமும் இல்லை. கடந்த இரண்டு நாட்களாக திமுக நடத்தும் கிராமசபை கூட்டங்களில் கலந்துகொண்ட பொது மக்கள் கூட்டத்தை பார்த்து அ.தி.மு.க வுக்கு பயம் வந்து விட்டது. இதனால்தான், கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளனர் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments