துறைமுகங்களின் அருகில் சேமிப்புக் கிடங்குகளைக் கட்ட அரசு திட்டம்..!

0 890
துறைமுகங்களின் அருகில் சேமிப்புக் கிடங்குகளைக் கட்ட அரசு திட்டம்..! - கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தகவல்

துறைமுகங்களுக்கு அருகில் குறிப்பிட்ட பொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளைக் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் துறைமுகங்களுக்கு அருகிலேயே குறிப்பிட்ட பொருட்களுக்கான தனித்தனிச் சேமிப்புக் கிடங்குகளைக் கட்ட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

சிமென்ட், மின்னணுக் கருவிகள், மருந்துகள், வாகன உதிரிப் பாகங்கள் ஆகியவற்றைச் சேமித்து வைக்க இவை உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இவற்றில் நீர்மங்கள், வேதிப்பொருட்களைச் சேமித்து வைக்கும் டேங்குகள், குளிர்பதனச் சேமிப்பு வசதிகள் ஆகியன இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments