ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை இடிப்பதற்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

0 3212
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய வணிக வளாகம் கட்ட ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை இடிப்பதற்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய வணிக வளாகம் கட்ட ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை இடிப்பதற்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் காலி செய்யும்படி,  மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து கடை உரிமம் பெற்றுள்ள 34 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில், கட்டிடம் இடியும் நிலையில் இருந்ததாலேயே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், அதை இடித்துவிட்டு புதிதாக கட்ட முடிவு எடுத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மாநகராட்சி அனுப்பிய நோட்டீசில்  விதிமீறல் ஏதும் இல்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்தும் தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments