தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிமுகவிடம் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை - பிரேமலதா விஜயகாந்த்

0 11962
தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிமுகவிடம் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிமுகவிடம் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை போரூரில் தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைப்பெற்றது. கிறிஸ்தவ தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் ஏழை மக்களுக்கு தேமுதிக சார்பில் மதிய உணவு அளிக்கப்பட்டது. இதில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மற்றும் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

அதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேர்தலை எதிர்கொள்ள தேமுதிக தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் வரும் காலங்களில் தேர்தல் குறித்த அறிவிப்புகள் கேப்டனின் ஆணைக்கிணங்க வெளியாகும் எனவும் கூறினார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments