தென்காசி: இளம் பெண் மர்ம மரணம் ; வடமாநிலத்தை சேர்ந்த கணவர் மாயம்!

0 15235

தென்காசி அருகே இளம் பெண் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான இளம் பெண்ணின் வட மாநிலத்தை சேர்ந்த கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள உச்சி பொத்தை கிராமத்தை சேர்ந்த வேல்சாமி என்பவரின் மகள் பூங்கோதை. திருப்பூரில் தனியார் பனியன் கம்பெனியில் பூங்கோதை வேலை பார்த்துள்ளார். அப்போது, சக பணியாளரான ராஜஸ்தானைச் சேர்ந்த ஜோகிந்தர் என்பவருக்கும் பூங்கோதைக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் சம்மதத்துடன் ஜோகிந்தரும் பூங்கோதையும் சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது, திருப்பூரில் வேலை இல்லாத காரணத்தினால் ஒரு மாதத்துக்கு முன்பு கணவன் , மனைவி இருவரும் சுரண்டை திரும்பி தனியாக வாடகை வீட்டில் வசித்துள்ளனர்.

பூங்கோதையை பணக்காரப் பெண் என்று கருதி ஜோகிந்தர் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், பூங்கோதை சலவைத் தொழிலாளியின் மகள் என்பதை சுரண்டை வந்ததும் ஜோகிந்தர் அறிந்து கொண்டதாக தெரிகிறது. இதனால், கணவர் - மனைவிக்கிடையே இடையே அடிக்கடி சண்டை நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் , பூங்கோதையின் வீடு பூட்டப்பட்டு நிலையில் கதவுக்கு வெளியே சாவி வெளியே இருந்தது. சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் பூங்கோதையின் வீட்டைத் திறந்து பார்த்தபோது , உள்ளே அவர் இறந்து கிடந்துள்ளார். அதே வேளையில், பூங்கோதையின் கணவர் ஜோகிந்தர் மாயாமாகி விட்டார் .

இதுகுறித்து சுரண்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் பூங்கோதை உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தலைமறைவான , பூங்கோதையின் கணவர் ஜோகிந்தரையும் தேடி வருகின்றனர். ஜோகிந்தர் பிடிபட்டால்தான் பூங்கோதை இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்று போலீஸார் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments