நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று சொல்லவில்லை.. மக்களுக்காக போராடி விட்டு வாருங்கள் என்று சொல்கிறேன் - சீமான்

0 3526
விஜய் ரசிகர்கள் தன் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள சீமான், நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று சொல்லவில்லை, பொது மக்களுக்காக போராடி விட்டு வாருங்கள் என்று சொல்வதாக விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் ரசிகர்கள் தன் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள சீமான், நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று சொல்லவில்லை, பொது மக்களுக்காக போராடி விட்டு வாருங்கள் என்று சொல்வதாக விளக்கம் அளித்துள்ளார்.

வீரமங்கை வேலுநாச்சியாரின் 224ஆம் ஆண்டு நினைவு நாள், பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அஞ்சலி நிகழ்ச்சி, நாம் தமிழர் தலைமை அலுவலகமான ராவணன் குடிலில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மறைந்த பேராசிரியர் தொ.பரமசிவனைப் பற்றி பேசும்போது கண்கலங்கினார்.

சீமானை கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தன் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது, விஜய் ரசிகர்களும் தனது தம்பிகள் தான் என்றார்.

நடிகர் சூர்யாவுக்கும் சிம்புவுக்கும் உள்ள சமூக அக்கறை வேறு யாருக்கும் இல்லை என்றும் சான்றிதழ் வழங்கிய சீமான், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு இல்லாத தகுதி ரஜினிக்கு என்ன இருக்கிறது என்றும் கேட்டார்.

எம்ஜிஆர் குறித்த விமர்சித்த சீமான் ஒரு அரைவேக்காடு என வைகோ கண்டித்திருப்பதாக செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, எம்ஜிஆர் நல்லவர் என்றால் ஏன் வைகோ அதிமுகவில் சேரவில்லை என எதிர்க்கேள்வி எழுப்பிவிட்டு, தன்னுடைய டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தார்.

பெரியாரிசம், அண்ணாயிசம் இருக்கும்போது சீமானிசம் இருந்தால் வலிக்கிறதா, என நாம் தமிழர் கட்சியிலிருந்து அதிமுகவிற்கு சென்ற கல்யாணசுந்தரத்திற்கு பதிலளித்தார்.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது, கல்வி மருத்துவம் தரமான குடிநீர் இலவசமாக தரப்படும் இதை தவிர்த்து மின்சாரமோ அரிசிபருப்பு இலவசம் வழங்கப்படாது என்றும் சீமான் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments