போதைப்பொருள் வழக்கில் கைதான கன்னட நடிகை ராகிணி திவேதி திடீர் உடல்நலக்குறைவு என கூறி மருத்துவமனையில் அனுமதி

0 1309
போதைப்பொருள் வழக்கில் கைதான கன்னட நடிகை ராகிணி திவேதி திடீர் உடல்நலக்குறைவு என கூறி மருத்துவமனையில் அனுமதி

போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகை ராகிணி திவேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதை பொருள் வழக்கில் கைதான கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவை காரணம் காட்டி, சஞ்சனாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

இந்நிலையில் சிறையில் உள்ள ராகிணி மூச்சுத்திணறல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வருவதாக கூறி பெங்களூர் ஜெயநகரில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments