நான்கு காது கொண்ட பூனை... கேரளாவில் வசிக்கிறது!

0 5395

கேரளாவில் வசிக்கும் நான்கு காதுகளை கொண்ட பூனை மக்களை கவர்ந்து வருகிறது. 

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பெய்பூர் என்ற ஊரை சேர்ந்தவர் மனோகரன் - ஷர்மிளா தம்பதி. பூனை பிரியர்களான இவர்கள், மாலூட்டி என்ற பெயர் கொண்ட  கருப்பு நிற பூனையை வளர்த்து வருகின்றனர்.  பொதுவாக , உயிரினங்களுக்கு இரண்டு காதுகள் இருக்கும். ஆனால் மலூட்டி என்ற இந்த பூனைக்கு 4 காதுகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இரண்டுப்பெரிய காதுகளும் அதற்கு பக்கத்தில்  2 சிறிய காதுகள் காணப்படுகின்றது. தோற்றத்தில் வித்தியாசமானதாக காணப்படும் மலூட்டியை காண அந்த பகுதி மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மனோகரன் தம்பதி  இதற்கு முன்னர் 4 பூனைகள் வளர்ந்து வந்துள்ளார். 

மனோகரனின் வீடு பரபரப்பான சாலையில் உள்ளது. இதனல், வீட்டுக்கு முன் விளையாடிய 4 பூனைகள் வாகனங்கள் மோதி இறந்து விட்டன. அதனால் 4 காதுகளை கொண்ட மலூட்டி பூனையை கண்ணும் கருத்துமான மனோகரன் தம்பதியினர் வளர்த்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments