அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத் தீயால் 3000 ஏக்கர் பரப்பில் மரங்கள் எரிந்து சாம்பல்

0 651
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத் தீயால் 3000 ஏக்கர் பரப்பில் மரங்கள் எரிந்து சாம்பல்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சாண்டியகோ பகுதியில் காட்டுத் தீயால் மூவாயிரம் ஏக்கர் பரப்பில் மரங்கள் எரிந்து சாம்பலாகியுள்ள நிலையில் காடுகளை ஒட்டிய வீடுகளில் இருந்து ஏழாயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புதன் இரவில் சாலையோரத்தில் ஓரிடத்தில் தீப்பற்றியது கண்டறியப்பட்டது. பலத்த காற்று வீசியதாலும் காய்ந்த சருகுகள், புதர்கள் அதிகமுள்ளதாலும் மளமளவெனப் பரவிய தீ, வியாழன் நண்பகலுக்குள் மூவாயிரம் ஏக்கர் பரப்பில் மரங்களை எரித்துச் சாம்பலாக்கியது.

கலிபோர்னியாவில் இந்தக் கோடைப் பருவத்தில் மட்டும் 40 லட்சம் ஏக்கர் பரப்பில் காடுகளும், பத்தாயிரம் வீடுகளும் தீக்கிரையாகியுள்ளன. காட்டுத்தீயால் 33 பேர் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments