அப்பலோவில் ரஜினி அனுமதி..

0 7353
நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

அண்ணாத்த...படப்பிடிப்பிற்காக ரஜினி ஹைதராபாத் சென்றிருந்த நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 22ஆம் தேதி ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, நெகடிவ் என முடிவு வந்தது.

இருப்பினும், அறிகுறிகள் ஏதேனும் வெளிப்படுகிறதா என்பதை கண்டறியவும், பாதுகாப்பிற்காகவும் ரஜினிகாந்த் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை, திடீரென ரத்த அழுத்தம் அதிகமாகி ரஜினிக்கு மயக்கம் ஏற்பட்டதால் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரஜினிகாந்த் இன்று காலை மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்துக்கு எவ்வித கொரோனா அறிகுறியும் இல்லை என்றும், அதேசமயம் ரத்த அழுத்தத்தில் ஏற்ற-இறக்கம் தீவிரமாக இருந்ததால், அதற்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரத்த அழுத்தம் சீராகும் வரை மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, சீரடைந்த பிறகே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் ஹைதராபாத் அப்போலோ கூறியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்துக்கு ஏற்ற-இறக்கமான ரத்த அழுத்தம், தளர்ச்சி இருந்தாலும், ரத்த ஓட்டத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும், வேறு அறிகுறிகள் ஏதுமில்லை என்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments