திமுக மீது இது வரை எந்த ஊழல் புகாரும் நிரூபிக்கப்பட்டதில்லை - மு.க.ஸ்டாலின்

0 1979
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தடையை மீறி மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின், திமுக மீது இது வரை எந்த ஊழல் புகாரும் நிரூபிக்கப்பட்டதில்லை என கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தடையை மீறி மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின், திமுக மீது இது வரை எந்த ஊழல் புகாரும் நிரூபிக்கப்பட்டதில்லை என கூறியுள்ளார். 

திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் கிராமத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று, கிராம மக்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

கிராம சபைக் கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், திமுக நடத்தும் கூட்டத்தை கண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அச்சமடைந்திருப்பதாகவும், அதனாலேயே கிராம சபைக் கூட்டங்களுக்கு திடீர் என தடை போடுவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக அமைச்சரவை மீது ஆளுநரிடம் ஊழல் புகார்களை ஆதாரத்துடன் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். திமுக மீதும் கூட ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலும், இது வரை எந்த புகாரும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments