கொரோனாவால் வேலை இழந்த துபாய் இந்தியருக்கு லாட்டரியில் விழுந்த 7 கோடி... மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர்

0 5824

கொரோனாவால் வேலையிழந்து குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது எனத் தவித்த இளைஞரின் வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாக மாறியுள்ளது.

கேரளா மாநிலம், காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நவனீத் சஞ்சீவன். இவர் மனைவி மற்றும் குழந்தையுடன் துபாயில் வசித்து வருகிறார். இதனிடையே, கொரோனா காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பல்வேறு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. அதில் வேலை செய்து வந்த பலர் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர். அப்படி வேலை இழந்தவர்களில் ஒருவர் தான் நவனீத் சஞ்சீவன். இதனால் சஞ்சீவன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.

தம்மை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறதே இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார். கடன் வாங்கிக் குடும்பத்தை அவர் நடத்தி வந்துள்ளார். அவரது மனைவியும் வேலைக்குச் சென்றுள்ளார். ஆனாலும் குடும்பத்தின் பணத் தேவையை அவரால் சமாளிக்க முடியவில்லை. இதனால் புதிய வேலைக்காக நாள்தோறும் வெவ்வேறு நிறுவனங்களில் நேர்முகத்தேர்விலும் கலந்து கொண்டிருக்கிறார்.

குடும்பத்தை சமாளிக்க அவர் வாங்கிய கடன் வட்டிக்கு மேல் வட்டி சேர்ந்துள்ளது. இதற்கிடையில் சஞ்சீவன் கடந்த நவம்பர் 22ஆம் தேதி எதார்த்தமாக DDF எனப்படும் துபாய் லாட்டரி வாங்கியுள்ளார். பின்னர் , தனது வழக்கமான வேலையை அவர் பார்த்து வந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் தான் அந்த அதியசம், அற்புதம் அவருக்கு அரங்கேறியிருக்கிறது. நவனீத் சஞ்சீவன் வாங்கிய லாட்டரிக்கு இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய்க்கு மேலான தொகை பரிசாக விழுந்துள்ளது. கடுமையான மன உளைச்சலிலிருந்த அவர், தனக்கு லாட்டரில் பணம் விழுந்துள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார். சோதனையான காலகட்டத்தில், லாட்டரியில் அடித்த ஜாக்பாட் தங்களின் வாழ்க்கையைக் கரைசேர்த்திருப்பதாகக் சஞ்சீவன் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments