கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவது எப்படி ?... அடுத்த வாரம் மத்திய அரசு சார்பில் ஒத்திகை

0 1765
கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவது எப்படி ?... அடுத்த வாரம் மத்திய அரசு சார்பில் ஒத்திகை

கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை ஆந்திரம், அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்துகளைப் பல்வேறு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. இவற்றில் செயல்திறன் மிக்க மருந்துகளைப் பொதுமக்களுக்குச் செலுத்தும் ஒத்திகையை நடத்திப் பார்க்க மத்திய அரசின் நலவாழ்வுத்துறை முடிவு செய்துள்ளது.

ஆந்திரம், அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் அடுத்த வாரத்தில் ஒத்திகை நடத்தப்பட உள்ளது.

இதற்காக மருத்துவ அதிகாரிகள், மருந்தாளுநர்கள், குளிர்பதன வசதி செய்பவர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு முன்கூட்டியே விரிவான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் இரண்டாயிரத்து 360 பயிற்சி முகாம்களில் 7000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments