இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, ஐதராபாத் பாரத் பயோடெக் ஆகியவை இணைந்து கோவாக்சின் என்னும் கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளன.
இந்த மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனை 22 இடங்களில் நடைபெற உள்ள நிலையில், அதற்குத் தன்னார்வலர்களை வரவேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனிடையே கோவாக்சின் தடுப்பு மருந்து முதல் இரண்டு கட்டச் சோதனைகளில் இருந்து பாதுகாப்பு, நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றில் சிறந்தது எனத் தெரியவந்துள்ளதால் இது குறித்த கட்டுரையை வெளியிட மருத்துவ இதழான லேன்சட் ஆர்வத்துடன் உள்ளதாகவும் ஐசிஎம்ஆர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.
Comments