டெல்லியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம்

டெல்லியில் ஒரு வாரக்காலத்தில் இரண்டாவது முறையாக இன்று அதிகாலையில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் ஒரு வாரக்காலத்தில் இரண்டாவது முறையாக இன்று அதிகாலையில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று அதிகாலை 5 மணி 2 நிமிடங்களுக்கு இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியின் பல பகுதிகளிலும் அதையொட்டி உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் இரண்டு புள்ளி மூன்றாகப் பதிவாகியுள்ளது. ஏற்கெனவே கடந்த 17ஆம் தேதி இரவில் நான்கு புள்ளி இரண்டு ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ராஜஸ்தானின் ஆல்வார் என்னுமிடத்தில் இந்த நிலநடுக்கத்தின் நடுப்புள்ளி இருந்ததாகப் புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments