பாப்புலர் பிரண்ட் இந்தியாவுக்கு 3 மாதத்துக்குள் ரூ. 100 கோடி பரிமாற்றம்! - நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்

0 10150
பாப்புலர் பிரண்ட் இந்தியா அமைப்பின் தலைவர் அப்துல் சலாம்

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு கேரளாவில் இயங்கி வரும் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு 100 கோடி ருபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியின் செயல்பாடு, சட்டவிரோதமாக இருப்பதாக கேரள அரசு குற்றம் சாட்டி வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு,  மத்திய பிரதேச மாநிலம் தெக்கன்பூரில் வருடாந்திர மாநில டி.ஜி.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் அனைத்து மாநில காவல்துறையை சேர்ந்த டிஜிபிக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கேரள டிஜிபி லோகநாத் பெஹரா, கேரள மாநிலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியின் வளர்ச்சி மற்றும் நடவடிக்கை குறித்து பேசினார். அந்த கட்சியின் குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து மூத்த பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் பட்டியலிட்டதோடு தடை செய்வதே நல்லது என்ற கருத்தையும் அவர் முன் வைத்தார்.

தொடர்ந்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியின் செயல்பாடுகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. பப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியை சட்ட விரோத கட்சி என்றும் அறிவிக்க தேவையான ஆதாரங்களும் மத்திய பாதுகாப்பு துறை தரப்பில் சேகரிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கேரளாவில் சில நாள்களுக்கு முன் பாப்புலர் இந்தியா அமைப்பின் துணை அமைப்பான கேம்பஸ் பிரன்ட் அமைப்பின் அமைப்பின் தேசிய செயலாளர் ரவூஃப் ஷெரீப் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்தான் , உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசுக்கு சித்திக் கப்பன் என்ற பத்திரிளையாளரை அனுப்பி வைத்தவர். அந்த பத்திரிகையாளரும் கைது செய்யப்பட்டார்.image

அமலாக்கத்துறை கஸ்டடியில் உள்ள  ரவூஃப் ஷெரீப்

கைது செய்யப்பட்ட ரவூஃப் ஷெரீப் அமலாக்கத்துறையின் கஸ்டடியில் வைத்து விசாரித்தது. இவரின், கஸ்டடியை நீட்டிக்க நேற்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து 2020 பிப்ரவரி மாதத்துக்குள் பாப்புலர் பிரன்ட் அமைப்பின் வங்கிக்கணக்குக்கு ரூ.100 கோடி பணம் வந்துள்ளது. இந்த பணம் சி.ஏ.ஏ போராட்டத்துக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் இருப்பதாகவும் ஹத்ராஸில் கலவரம் ஏற்படுத்த திட்டமிட்டிருத்தாகவும் கூறியது. அதே வேளையில், ரவூஃப் ஷெரீப் அமலாக்கத்துறையினர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் இந்த பணம் அனைத்தும் ஓமன் நாட்டில் தான் மேற்கொண்ட ஏற்றுமதி வியாபாரத்தின் மூலம் கிடைத்ததாக நீதிபதியிடத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, ரவூஃப் ஷெரீப்பின் கஸ்டடியை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்த நீதிபதி, அவரை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது என்று அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

டிசம்பர் 3 ஆம் தேதி பாப்லர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான டெல்லி, சென்னை, திருவனந்தபுரம் , மதுரை, தென்காசி, மலப்புரம், கொச்சி உள்ளிட்ட 26 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது- பாப்புலர் பிரண்ட் அமைப்பின் தலைவர் அப்துல் சலாம் மற்றும் தேசிய செயலாளர் நஷ்ருதீன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments