லண்டனில் இருந்து மதுரை வந்த பயணிக்கு கொரோனா உறுதி

லண்டனில் இருந்த மதுரை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் லண்டனில் இருந்து துபாய் வழியாக மதுரை வந்த 88 பயணிகளில் 29 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருந்தது. அவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மதுரை தவிட்டுசந்தை பகுதியை சேர்ந்த ஒரு பயணிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். பிரிட்டனில் பரவும் மரபியல் மாற்றமடைந்த கொரோனா தொற்றா எனக் கண்டறிய, மாதிரிகள் புனேவிற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ல
ண்டனில் இருந்து திரும்பிய மற்ற பயணிகள் முகாம்களிலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, நேற்று துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகள் இருவருக்கு கொரோனா அறிகுறியை தொடர்ந்து இருவரையும் மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments