'அவர் வருந்தவில்லை ;இன்னும் திருந்தவில்லை! ' -கொந்தளித்த பெண் நூலகர்களால் ஆண் நூலகர் சஸ்பெண்ட்

பெண் நூலகர்கள் கண்டித்தும் தொடர்ந்து இரட்டை அர்த்தத்தில் பேசி சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆண் நூலகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், போராட்டம் நடந்த வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தில் செவ்வாய்பேட்டை சத்திரம் பகுதியில் அரசின் கிளை நூலகம் உள்ளது. மூன்றாம் நிலை நூலகராக இங்கு மணிவண்ணன் என்பவர் பணியாற்றி வந்தார்.இவர், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சேலம் மாவட்ட தலைவராகவும், பொது நூலகத் துறை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளராகவும், இருந்து வருகிறார்.மணிவண்ணனுடன் இரண்டு பெண் நூலகர்களும் இந்த நூலகத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த பெண்கள் இருவரும் கடந்த வாரம் மாவட்ட நூலக அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.இதில், தங்களுடன் பணியாற்றும் ஆண் நூலகர் மணிவண்ணன் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார் .தவறான அர்த்தத்துடன் பேசி எங்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறார். .இப்படி பேச கூடாது என பலமுறை எச்சரித்தும் அவர் திருந்தவில்லை இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
விசாரணை மேற்கொண்ட சேலம் மாவட்ட மைய நூலக அலுவலர் கோகிலவாணி, மூன்றாம் நிலை நூலகர் மணிவண்ணனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இதனால் ,கோபமடைந்த மணிவண்ணனின் ஆதரவாளர்கள் சிலர் சேலம் சுந்தர் லாட்ஜ் பகுதியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில்ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர் .
தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் செய்ய கூடாது. மீறி ஆர்ப்பாட்டம் செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை செய்தனர்.இதனால் ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சேலம் மாவட்ட மைய நூலகம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments