ஐயப்பன் பக்தி பாடல்கள் மூலம் பிரபலமான பாடகர் வீரமணி ராஜூவுக்கு கேரள அரசு உயரிய ஹரிவராசனம் விருது

0 3737
ஐயப்பன் பக்தி பாடல்கள் மூலம் பிரபலமான பாடகர் வீரமணி ராஜூவுக்கு கேரள அரசு உயரிய ஹரிவராசனம் விருது

ஐயப்பன் பக்தி பாடல்கள் மூலம் பிரபலமான பாடகர்  எம்.ஆர். வீரமணி ராஜுவுக்கு கேரள அரசு உயரிய ‘ஹரிவராசனம்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை வீரமணி ராஜு பாடியுள்ளார். 

பாடல்கள் மூலம் நாட்டு மக்களிடையே மதநல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் உருவாக ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி 2021-ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது வீரமணி ராஜுவுக்கு அளிக்கப்படுவதாக கேரள அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் உள்ளிட்டவை அடங்கும்.

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஹரிவராசனம் விருது அவருக்கு அளிக்கப்படும் என்று கேரள மாநில தேவஸ்வம் வாரிய அமைச்சர்  கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments