உலகெங்கும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்..!

0 1886
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் தமது கிறிஸ்துமஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் தமது கிறிஸ்துமஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வாட்டிகனில் கிறிஸ்துமஸ் விழா எளிமையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற நள்ளிரவு பிரார்த்தனையில் போப்பாண்டவர் பிரான்சிஸ் சிறப்பு திருப்பலி நடத்தினார்.

இதில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு முகக்கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் விடுத்த கிறிஸ்துமஸ் செய்தியில், ஏசு பாலகனாக உலகில் அவதரித்து எல்லோரையும் குழந்தைகளைப் போல் ஆக்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.ஏழைகளுக்கு கருணையுடன் சேவை புரிவதே இறைவனுக்கே சேவை செய்வதாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏசு பிறந்த புனிதத்தலமான பெத்லஹேமில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து , இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா எளிமையாகவே நடைபெற்றது. சில இடங்களில் சிறப்பு விருந்துகள், கலை நிகழ்ச்சிகள், வழிபாடுகள் போன்றவற்றுடன் மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிறிஸ்துமசை முன்னிட்டு அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் கிறிஸ்துமஸ் தாத்தாவான சாந்தா கிளாஸ் நீர்ச்சறுக்குப் போட்டி உள்ளிட்ட பல்வேறு கண்கவரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments