சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை வழிபாடு

0 1265
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை வழிபாடு நடைபெறுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை வழிபாடு நடைபெறுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் பூஜைகள் நடந்து வருகிறது.

மண்டல பூஜை நிறைவு சிறப்பு வழிபாடு நாளை நடக்கிறது. இதனை முன்னிட்டு அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து இன்று மதியம் ஒன்றரை மணியளவில் பம்பை வந்து சேருகிறது.

நாளை மதியம் மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் சபரிமலையில் நடைபெறும். தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு பின் மண்டல பூஜை நிறைவு பெற்று இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் சபரிமலை நடை டிசம்பர் 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments