கொடுமையோ கொடுமை.. சிறுமியை சீரழித்த ஐந்து சிங்காரிகள்..! 600 பேர் பட்டியல் தயார்
மதுரையில் தாய் தந்தை இல்லாத 16 வயது சிறுமியை லாட்ஜுகளுக்கு அழைத்துச்சென்று காமுகர்களுக்கு வாடகைக்கு விட்ட 5 பெண் புரோக்கர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 வருட பாலியல் கொடுமையால் 70 வயது மூதாட்டியாக உடல் தளர்ந்து போன சிறுமியின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
மதுரை உத்தங்குடி அருகேயுள்ள விஐபி கார்டன் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து ஆட்கடத்தல் மற்றும் விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான தனிப்படையினர் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். அப்போது உடன் இருந்த சரவணபிரபு என்ற புரோக்கரை கைது செய்தனர்.
இதையடுத்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை 600 பேர் சீரழித்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த சிறுமிக்கு 10 வயதாக இருக்கும் போது தாய் தந்தையை இழந்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு உறவினரான ஜெயலட்சுமி என்பவர் படிக்க வைப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
அந்த சிறுமி 13 வயதில் பூப்படைந்த நிலையில் அப்போது முதல் அவரை மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளிய ஜெயலட்சுமி, சிறுமியை பல புரோக்கர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கைமாற்றி விட்டுள்ளார்.
கடந்த 3ஆண்டுகளில் மட்டும் ஜெயலட்சுமி தனது தோழிகளான அனார்கலி, சுமதி, ஐஸ் சந்திரா, தங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் சரவணபிரபு சின்னதம்பி ஆகியோர் உதவியுடன் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட மாநிலங்களை சேர்ந்த நபர்களிடம் பாலியல் தொழிலுக்கு சிறுமியை மாதவாடகைக்கு விட்டுள்ளார்.
இந்த பாலியல் சிங்காரி கும்பல் நபர் ஒருவருக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பணம் வசூலித்து கொண்டு சிறுமியை சீரழித்த கொடுமை அரங்கேற்றியதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து உறவினரான ஜெயலட்சுமி, சுமதி, ஐஸ் சந்திரா அனார்கலி தங்கம் உள்ளிட்ட 5 பெண் முகவர்களையும் அதிரடியாக கைது செய்தனர்.
13 வயதில் இருந்து சிறுமியை ஜெயலட்சுமி உள்ளிட்ட 5 சிங்காரிகளும் இதுவரை 600க்கும் மேற்பட்ட காமுகர்களிடம் இந்த சிறுமியை பாலியல் வாடகைக்கு அனுப்பியதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
ஓட்டுனர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை என 600க்கும் மேற்பட்டோர் சிறுமியை சீரழித்தவர்கள் பட்டியலில் உள்ள நிலையில் அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்தார்.
இந்த 6 பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்க்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடுமையான பாலியல் அத்துமீறல்களால் சிறுமியின் உடல் 70 வயது மூதாட்டி போல தளர்வடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திள்ளனர். அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமியிடம் கடந்த 3ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்ட நபர்களின் விவரங்கள் சேகரித்து தனிப்படை அமைத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
சிறுமியை கொடுமையாக சீரழித்த காமுகர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!
Comments