நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லா ரயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 28 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

0 9877
நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லா ரயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 28 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை வருகிற 28 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஓட்டுநர் இல்லாமல், முழுக்க, முழுக்க தானியங்கி முறையில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை வருகிற 28 ஆம் தேதி டெல்லியில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லா ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியின் ஜனக்புரி மேற்கு - தாவரவியல் பூங்கா வரையிலான 37 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய நிகழ்ச்சியிலேயே தேசிய பொது போக்குவரத்து அட்டை திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments