மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தையை, பெற்ற தாயே கொலை செய்த கொடூரம்

0 4503
சென்னை கொருக்குப்பேட்டையில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தையை, பெற்ற தாயே கொலை செய்தது 10 மாதங்களுக்குப் பின் தெரிய வந்தது.

சென்னை கொருக்குப்பேட்டையில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தையை, பெற்ற தாயே கொலை செய்தது 10 மாதங்களுக்குப் பின் தெரிய வந்தது.

கொருக்குப்பேட்டையச் சேர்ந்த நதியாவிற்கு முதல் குழந்தை வயிற்றிலேயே உயிரிழந்த நிலையில், இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கும் வலிப்பு மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குழந்தையின் இடது கண் வெளிப்புறமாகச் சிவந்தது. இதையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இந்நிலையில் தற்போது வெளிவந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தைக்கு உள்காயங்கள் இருந்தது தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், குழந்தையின் தாயாரே தாக்கியது தெரிய வந்ததால், போலீசார் அவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments