சக்ரா படத்தை வெளியிடுமுன் விஷால் தங்களுக்கு தர வேண்டிய ரூ. 58 லட்சத்தைக் கேட்டு நிதி நிறுவன உரிமையாளர் நோட்டீஸ்

சக்ரா படத்தை வெளியிடும்முன் விஷால் தங்களுக்குத் தர வேண்டிய 58 லட்ச ரூபாயைச் செலுத்தும்படி பைனான்சியர் விஜய் கோத்தாரி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு ஒரு படத்தைத் தயாரிக்க விஜய் கோத்தாரியிடம் விஷால் 50 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தாமல் விஷால் இழுத்தடித்ததால் விஜய் கோத்தாரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில் 50 லட்ச ரூபாயை 9 விழுக்காடு வட்டியுடன் திருப்பிச் செலுத்தக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஓராண்டாகியும் விஷால் பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை. விஷால் நடித்த சக்ரா படம் வெளியாக உள்ள நிலையில், விஜய் கோத்தாரி சார்பில் நடிகர் விஷாலுக்கும், ஓடிடி தளங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், படத்தை வெளியிடுமுன் விஷால் தங்களுக்குத் தர வேண்டிய பணத்தைக் கொடுத்து விட்டு மீதிப் பணத்தை விஷாலுக்கு வழங்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments