டெல்லியில் 29 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் : அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு

0 988
டெல்லியில் 29 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் : அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு

அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதியை முடிவு செய்யும்படி விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு மீண்டும் கடிதம் எழுதி உள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 29-வது நாளை எட்டி உள்ளது.

மத்திய அரசு சார்பில் விவசாயிகளுடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

ஆனால், விவசாயிகள் தரப்பில் இதுவரை பேச்சுவார்த்தைக்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி மற்றும் நேரத்தை முடிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments