இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 7061
இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதியவகை உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.
இதனால் சமீபத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

அவ்வகையில், இதுவரை 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் 14 பேருக்கும், அமிர்தசரசில் 9 பேருக்கும், கொல்கத்தாவில் 2 பேருக்கும், சென்னையில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதனிடையே கொரோனா தொற்றுடன் இங்கிலாந்தில் இருந்து டெல்லி திரும்பி ஆந்திராவுக்கு ரயிலில் மகனுடன் சென்ற பெண், ராஜமுந்திரி அருகே ரயிலில் இருந்து அதிகாரிகளால் இறக்கப்பட்டார்.

பின்னர் அவர் மகனுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments