பொங்கல் பரிசு வழங்கும் போது, ரேசன் கடைகளில் பெண்களுக்கு தனி வரிசை அமைக்க தமிழக அரசு உத்தரவு

0 22039
பொங்கல் பரிசு வழங்கும் போது, ரேசன் கடைகளில் பெண்களுக்கு தனி வரிசை அமைக்க தமிழக அரசு உத்தரவு

பொங்கல் பரிசு வழங்கும் போது, ரேசன் கடைகளில் பெண்களுக்கு தனி வரிசை அமைக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்குப் பொங்கல் பரிசுவழங்கும்போது முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பெண்களுக்கு தனி வரிசை அமைக்க வேண்டும் என்றும், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக்கடைகளில் கூடுதலாக ஒரு பணியாளரை நியமிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாளில் காலையில் நூறு பேருக்கும், பிற்பகலில் நூறு பேருக்கும் என 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பரிசுத்தொகையை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments