திருப்பதி கோவில் வைகுண்ட ஏகாதசி விழா : தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே வர வேண்டும் என்று அறிவிப்பு

0 2147
திருப்பதி கோவில் வைகுண்ட ஏகாதசி விழா : தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே வர வேண்டும் என்று அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை  நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஜவஹர்ரெட்டி ,வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருமலைக்கு வரும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றார். 

குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்ற அவர்,தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு வர வேண்டும் என்றார்.

சொர்க்கவாசல் வழியாக சென்று மூலவர் மற்றும் உற்சவர் மலையப்பசாமியை ஜனவரி 3-ந்தேதி வரை தரிசிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments